top of page

"மேடை கச்சேரிகளின்   மஹாராணி"

மேடை ஏறி ஒரு பாடல் பாடுவதே மிகவும் கடினமான பிரயத்தனம். இவர் 30,000 கும் மேற்பட்ட மேடையில் பாடல்களை பாடி உள்ளார் என்றால் சொல்லும் போதே மூச்சடைத்து போகிறது. கர்நாடக மெல்லிசை பாடகியான இவர் 17 வயதில் 1000 மேடைகளில் பாடி சாதனை புரிந்திருக்கிறார். இவரது தாயார் ராதா விஜயராகவன் கர்நாடக இசையில் கலை  மாமணி பட்டம் பெற்றவர். தாயை போல பிள்ளை நூலை போல சேலை என்பார்கள். இவரின் தாயார் பாடகியாக இருப்பதால் சிறு வயதிலிருந்தே இவருக்கு  இசை மேல் ஆர்வம் இருந்தது. முதன் முறையாக தன் உறவினர் நிகழிச்சியில் பாடிய இவருக்கு பாராட்டுகள் குவிந்தன. அத்தருணம் இவரை பாடகியாக உருமாற்றியது.  தனது 9வது வயதில் வானொலியில் பாட ஆரம்பித்தார். 

கங்கை அமரன், இளையராஜா ,RG கண்ணன், சந்திரன், கே வீரமணி ஆகியோரின்  குழுவில் பாடியுள்ளார். ஒரே நாளில் 3,4 கச்சேரிகளில் கூட பாடி அசத்தி  உள்ளார். சீனா, ஜப்பான், USA, தவிற மீதம் உள்ள பெரும்பான்மையான  எல்லா வெளிநாடுகளும்  பாடி உள்ளார். சில சமயங்களில் இவர் பாடுவதை கேட்டவர்கள் அந்த பாடலை திரையில் பாடியவர்களை விட நன்றாக உள்ளதே என்று வியந்துள்ளனர். இசையின் கடலில் நீந்துவது மட்டும் இன்றி பல பாடகர்களையும் நீந்தவைக்கிறார் இந்த Voice trainer. 

இவரிடம் பயிற்சி பெற்ற பலர் பல நிகழ்ச்சிகளில் பல பரிசுகளை வென்றுள்ளனர். ஜீ தமிழ் சரிகம பாவில்  வாய்ஸ் trainer ஆக தற்போது பல பாடகர்களை வெற்றி பாடகர்களாக மாற்றி வருகிறார். தற்போது இவரது மகள் நிவேதாவும் பாடகியாகவும், dubbing artist ஆகவும் உருமாறி இருக்கிறார். 34 வருடங்களாக மேடைகளில் பாடி மேடை கச்சேரிகளின் மகாராணியாக விளங்கும் நிரம்லா நரசிம்ஹன்.

bottom of page