என்ன மாதிரி புதிய கலைஞர்களுக்கு ஆதரவு குடுத்தாங்க "ஸ்வேதா மோகன்" 

- ஜிபின் சஜி 

 

                                                                                       இசை பயணத்தின் ஆரம்பம் பற்றி 

 

                                                                               4 வயசுல ஆரம்பிச்சுது என்னோட இசைப்பயணம். முதல்                                                                                 முதல்ல கத்துக்குட்ட பாட்டு  "ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில்                                                                                 ஸ்டார்" னு  நினைக்கிறேன். 

 

 

 

 

 

 

 

உங்களுக்கு இசை மீது ஆர்வம் வர காரணமாக இருந்தவர் பற்றி 

 

 

இசை மேல எனக்கு ஆர்வம் வர காரணம் ஏ.ஆர்.ரகுமான். அவர்  சினிமால கொண்ட வந்த மாற்றம் வியக்கத்தக்கது. மைக்கேல் ஜாக்சனும் எனக்கு இசை மேல ஆர்வம் வர இன்னொரு காரணம். அவரோட இசை அமைக்கும் விதத்தில் இருந்தும் நெறய கத்துக்கலாம். இசை மேல இருந்த ஆர்வத்துனால நானே கத்துக்கிட்டேன். இப்ப நான் பியானோல 8th கிரேட் பண்ணிட்டு இருக்கேன்.

 

 

ஸ்வேதா மோகன் பற்றி 

 

  ஸ்வேதா மோகனின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். அம்மாவின் இசை உள்ளுணர்வு ஸ்வேதா அவர்களிடமும் உள்ளது. ஒரு நாள் அவரை நேரடில் சந்திக்க ஆசை.

 

ஸ்வேதா மோகன் பாடியதில் பிடித்த பாடல்கள் 

 

இன்னும் கொஞ்ச நேரம், என்ன சொல்ல, நீ பார்த்த விழிகள், மாய நதி 

 

ஸ்வேதா  "Instrumental mashup" எப்படி நிகழ்ந்தது 

 

 என் நண்பன் திருமுருகன்  ஸ்வேதா மோகன் பிறந்தநாளுக்காக 15 இசை

மற்றும் பாடல் சம்பந்தமான காணொளிகளை அவருக்கு பரிசளிக்க

இருந்தார். "ஸ்வேதா மோகன்" குரல்  எனக்கும் மிகவும் பிடிக்கும் அதில்

நானும் இணைத்து கொண்டேன்.

 

இந்த "Instrumental mashup"  ஸ்வேதா  மோகன் கேட்டாரா? என்ன சொன்னார்?

 

 இந்த பாடலை ஸ்வேதா மோகன் கேட்டார். உங்கள் அன்புக்கு நன்றி என ட்விட்டரில்  பதில் அளித்திருந்தர். சமீபத்தில் அவருடைய முகநூல் பக்கத்திலும்  பதிவிட்டிருந்தார். என்ன மாதிரி புதிய கலைஞர்களுக்கு ஆதரவு குடுத்தாங்க "ஸ்வேதா மோகன்" அவருக்கு மிக பெரிய நன்றி.

"ஸ்வேதா மோகன்" குரல் பற்றி 

ஸ்வேதா மோகனுக்கு தேன் போல குரல். மேடை நிகழ்ச்சிகளில்

அவர் பாடும் விதம் அபாரம். அவரின் புதிய ப்ரொஜெக்ட்ஸ்க்கு

வாழ்த்துக்கள். அவரின் முதல் இண்டிபெண்டெண்ட் பாட்டான 

"யாவும் எனதே" மிகவும் நன்றாக இருந்தது. இது போல் இன்னும்

நிறைய பாடல்களை எதிர் பார்க்கிறேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எதிர் கால திட்டங்கள் பற்றி 

 

 இசையில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது. பல புதிய பாடல்களை இசை அமைக்கவும் ஆசைகள் உள்ளது.

Article by,

       Thirumurugan

Cover by Jibin

  • Isai24x7
  • Isai24x7
  • Isai24x7